
நீண்ட நாட்களுக்குப் பிறகு பசுமலை நகருக்கு நேற்றைய தினம்
(07.05.2022_ சனிக்கிழமை)
சென்று வந்தேன்.
போகும் போதும் வரும் போதும் வழியில் பாடசாலை மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் கண்டேன்.
அவர்களை விசாரித்தப்போது
அவர்கள் நு/ஹோல்புறூக் தமவி யில்(ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி)கல்வி கற்கும் மாணவர்கள்.இன்றைய தினம் பாடசாலையில் காலை வேளையில்
தரம் 6க்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும்
பின்னேரம் இந்த வருடம்
க.பொ.த சா/தரப் பரீட்சைக்கு
தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களது பெற்றோர்களுடனான விசேட சந்திப்பும் இடம்பெற்றதாக
அறியக்கூடியதாக இருந்தது.
உடனே பாடசாலையின் முக்கிய ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து விடுமுறை நாளில் மேலதிகமாக அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆற்றும் பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.
பாடசாலை விடுமுறை நாட்கள் கொஞ்சம் அதிகமானதால் இவ்வாறான நிகழ்வுகளை சனிக்கிழமை போன்ற பாடசாலை விடுமுறை நாட்களில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும்
அதற்காக மேலதிகமாக கடமையாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாட்களில் நடைபெறும் மேவதிக வகுப்புகள் பற்றியும் அறியதந்தார்.
இப்படியான கல்வி நடவடிக்கைகள் இங்கு மட்டுமல்ல பல பாடசாலைகளில் இடம்பெறுகிறது.
இவ்வாறான நடவடக்கைகள் காரணமாகவே அந்தப் பாடசாலைகள் சிறந்த பெறுபேற்றினை பெற்று தரமான பாடசாலைகள் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
எப்படியாவது அரசாங்க தொழில் வேண்டும்.கிடைச்சதுக்கு பிறகு
நா 2 மணி வரைதான் வேலை செய்வேன் சனி மற்றும் விடுமுறை நாட்களில் பாடசாலைக்கே போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒருசில ஆசிரியர்கள் மத்தியில் இவ்வாறான கடமை உணர்வோடும் சமூக உணர்வோடும் பணியாற்றும் அதிபர் ,ஆசிரியர்களுக்கு தலை வணங்குவோம்.