செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் ரூ.5,000 : இவ்வாரம் முதல்.!

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நாளாந்த வேதனத்திற்காக தொழிலில் ஈடுபடுவர்களுக்கும், வேறு வருமானம் இல்லாதவர்களுக்கும், அரச ஊழியர் அல்லாதவர்களுக்கும் சமுர்த்தி பயனாளர்கள் தவிர்ந்த குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

முதற்கட்ட தரப்படுத்தலின் பிரகாரம் சுமார் 21 இலட்சம் குடும்பங்கள் இந்நிதியை பெற தகுதி பெற்றுள்ளதோடு, இந்நிவாரண நிதியை வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் முதல் முன்னெக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

5,000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் நாடுதழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 30 இலட்சம் குடும்பங்களுக்கு இதுவரையில் 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button