செய்திகள்

குளம் உடைந்து காணாமல் போயிருந்த 6 பேர் உயிருடன் மீட்பு

முல்லைத்தீவு – குமுலமுனை கிழக்கு பகுதியில் நித்தகேக்குளம் உடைந்ததில் குளத்திற்கு அருகில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

குளத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த தாய், தந்தை, குழந்தை மற்றும் குளத்திற்கு அருகில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சிலருமே சம்பவத்தில் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குளம் உடைந்ததில் அப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், நிலவும் சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிட்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button