நுவரெலியாமலையகம்

குளவிக் கொட்டுக்கு உள்ளாகி 7 பேர் காயம்

சாமிமலை சின்னசூரிய கந்த தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஏழு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

இவர்கள் உடனடியாக மஸ்கெலியா ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் நால்வர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button