செய்திகள்

குளவித் தாக்குதலில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் அலுவலகம் அறிக்கை

குளவித் தாக்குதலில் இருந்து தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க பெருந்தோட்ட கம்பனிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கு இதற்கான கடிதங்களை பிரதமர் அலுவலகம் அனுப்பிவைத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக மலையகத்தில் தொழிலாளர்கள் குளவித் தாக்கத்தினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் குறித்து பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து குளவித் தாக்குதலில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க உரிய நடவடி;ககை எடுக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம், பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்கள் அண்மைக்காலமாக குளவித் தாக்குதலில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தோட்டக் கம்பனிகளுடன் நேரடியாக பேசியிருந்தார். நானும், பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். தொடர் முயற்சியினால் தற்போது தீர்வொன்று கிடைத்துள்ளது.

கம்பனிகள் இவற்றை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Related Articles

Back to top button