குளவி கொட்டிற்கு இலக்காகிய 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ – லொய்னோன் தோட்டபகுதியில் குளவி கொட்டிற்கு இலக்காகிய 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், குளவி கொட்டிற்கு இலக்கானவர்களில் 12 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என தெரியவந்துள்ளது.
இதில் 10 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், 2 பெண்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், தோட்ட நிர்வாகத்திடம் நோயாளர் காவு வண்டி ஒன்று இன்மையால் குளவி தாக்குதலுக்கு இலக்கானவர்களை கொழுந்து பார ஊர்தியில் தாங்கள் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டி ஒன்றை பெற்று தர நடவடிக்கை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.