செய்திகள்

குளியாப்பிட்டியவில் இலஞ்சம் பெற்றவர் கைது.

குளியாபிட்டியவில் ஆயிரத்து 500 ரூபா இலஞ்சம் பெற்ற சமுர்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குளியாபிட்டிய கிழக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்தி உத்தியோகஸ்தர் ஒருவராவார்

கைது செய்யப்பட்டுள்ள சமுர்தி உத்தியோகஸ்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

Related Articles

Back to top button
image download