செய்திகள்

குழப்பத்துடன் நிறைவடைந்த சபை நடவடிக்கைகள்

ஒன்றிணைந்த எதிரணியின் நாளை நடத்தவிருக்கின்ற, அரசாங்கத்துக்கு எதிரான பேரணி தொடர்பில், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் சபை நடவடிக்கைகள் கூச்சல் குழப்பத்துடன், சற்றுமுன்னர் நிறைவடைந்தன.

இந்த வாய்த்தர்க்கத்துக்கு இடையில், 3 சட்டமூலங்களை எவ்விதமான எதிர்ப்புகளும் இன்றி அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டது.

இதனையடுத்து, ஒன்றிணைந்த எதிரணியினால் முன்வைக்கப்படவிருந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரேரணை முன்வைப்பதற்கு யாரும் முன்வராமையால், பாராளுமன்ற நடவடிக்கைகள் யாவும், நாளை பிற்பகல் ஒரு மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com