அரசியல்செய்திகள்

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளை கருத்திற் கொண்டு, இந்த தீர்மானத்தை எடுத்ததாக தமிழ்த் தேசிய க்கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி, உண்மையாகவே ஜனநாயத்தில் பற்றுக் கொண்டவராகவும், சர்வாதிகார போக்கிற்கு இட்டுச் செல்லக்கூடிய  அதிகாரவாதத்திற்கு எதிரானவராகவும்,  சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க   சேவை  ஆகியவற்றின் மீதும்  உண்மையாகவே பற்றுறுதி பூண்டவாராக இருக்க  வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும்  நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது  பற்றுறுதி  கொண்டவராகவும், அனைத்து பிரஜைகளுக்கும் தமது விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் ஒருவராகவும் இருக்க வேண்டும் என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போன்று,  தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தர்வர்கள் என்று உணரும் ஓர் ஐக்கிய பிரிபடாத,  பிரிக்க முடியாத நாட்டின் உருவாக்கதத்திற்கு இட்டுச் சென்று சகல பிரஜைகளுக்கும் தேசிய ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தை பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவுதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதான வேட்பாளர்களான, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாச, ஆகியோரின்  கடந்த கால செயற்பாடுகளை கருத்திற் கொண்டு பொருத்தமான கணிப்பொன்றை மேற்கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button