செய்திகள்

கூட்டுறவு சங்கங்கள் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி
சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை நேற்று (29) ஆரம்பமானது.

நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொது மக்களுக்கு அரிசியை வழங்கும் அரசாங்கத்தின்
திட்டத்திற்கு அமைவாக அரிசியாக்கப்பட்ட முதலாவது தொகுதி அரிசி வெலிசர சதோச
களஞ்சிய சாலைக்கு நேற்று கொண்டுசெல்லப்பட்டது.

இந்த நடவடிக்கைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிட்டார்.

நெல் பங்குகள் அரிசியாக மாற்றப்படுவது கடந்த பருவத்தில் சிறு மற்றும் நடுத்தர
ஆலை உரிமையாளர்களால் அரசாங்க நிதியுடன் வாங்கப்பட்டது.

இதேவேளை அத்தியாவசிய நுகர்வுப்பொருளாக அறிவிக்கப்பட்டிருக்கும் அரிசி உள்ளிட்
பொருட்களை நிர்ணய விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம்
அறவிடப்படும் தண்டப்பணத்தை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த நிகழ்வின் போது
தெரிவித்தார்

இந்த குற்றத்திற்காக தற்போது 2 ஆயிரத்து 500 ரூபா தண்டப் பணமாக
அறவிடப்படுகின்றது. அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சிறு மற்றும் மத்திய தர
அரிசியாலை உரிமையாளர்கள் சதொச நிறுவனத்திற்கு நிர்ணய விலைக்கு அரிசி
வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button