மலையகம்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நாங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை பெருந்தோட்ட மக்களுக்கான சம்பள போராட்டம் இடம் பெற்றது.

இந்த போராட்டத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல சிவில் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், தேயிலையின் விலை அதிகரித்துள்ளதனால் மக்களை பெருந்தோட்ட நிறுவனங்கள் ஏமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்றினால் பெருந்தோட்ட நிறுவனங்களை துரத்தியடித்து தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடும் போது,
பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளத்தை வழங்க வேண்டும். இவ்வளவு காலமும் மலையகத்தில் எல்லா தொழிற்சங்கங்களும் பிரிந்து செயற்பட்டோம். இந்த மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்காக எல்லா தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நாங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இதனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துக் கொண்டு கம்பனிகாரர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

எனக்கும், அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முடியாது. காரணம் சட்ட சிக்கல் உள்ளது. இதனால் மக்களுக்கு முறையான சம்பளத்தை பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கவாதிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும் என்றார்.

Related Articles

57 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button