மலையகம்

கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பில் ஒன்று கூடிய மலையக இளைஞர்கள்

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றனை மலையக சமூக ஆய்வு மையம், மற்றும் மலையக கொழும்பு வாழ் இளைஞர்கள் ,மலையக தமிழர் பண்பாட்டு பேரவை ,மலையக இளம் ஊடகவியாளர்கள் சங்கம் ஆகியன நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தன.

இந்த கலந்துரையாடல் வெள்ளவத்தை புனித லோரன்ஸ் தேவாலய மண்டபத்தில் மாலை 3.30மணி அளவில் ஆரம்பமானது.

கந்துரையாடலில் மலையகத்தை சேர்ந்த பல இளைஞர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் இன்னும் சில மலையக சிவில் அமைப்புகளை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் மாதங்களில் இடம் பெறவுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மலையகத்தை
சார்ந்தவர்களின் நிலைப்பாடும், மலையக மக்களின் நடைமுறை பிரச்சனைகள் தொடர்பாகவும் பல காத்திரமான தகவல்களை இங்கே கலந்துரையாடப்பட்டன.

இந்த கலந்துரையாடல் தொடர்ந்தும் ஹட்டன் ,நுவரெலியா ,கண்டி ,களுத்துறை ,ரத்னபுர ,பதுளை போன்ற இடங்களிலும் நடத்தப்பட வேண்டுமென இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button