மலையகம்

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் நாளை நடைபெறவிருந்த கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் தமக்கு தகவல் வழங்கியதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் அருள்சாமி  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட் கிழமை 4 மணியளவில் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, முதலாளிமார் சம்மேளனம் நாளைய தினம் செம்பனை பயிர்செய்கை தொடர்பில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button