செய்திகள்

கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை -கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சி – முழங்காவில், சோலைப்பல்லவராயன்கட்டு மாதிரி கிராமத்தில் இளைஞர்
ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது
தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.

சோலைப்பல்லவராயன்கட்டு மாதிரி கிராமம் பகுதியை சேர்ந்த 31 வயதான ஒருவரே
சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை
முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com