உலகம்

கென்ய பாடசாலை கட்டிட சரிவில் ஏழு பேர் உயிரிழப்பு – 57 பேர் காயம்.

கென்ய தலைநகர் நைரோபியில் ஆரம்ப பாடசாலையொன்றின் வகுப்பறைக் கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமான போது, மரத்தாலான கட்டமைப்பைக் கொண்ட வகுப்பறையொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பல மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவசர சேவை பிரிவினர் அங்கு முதலுதவி வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட சரிவு இடம்பெற்ற பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடியுள்ளதன் காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை காயமடைந்த நிலையில் 57 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில், குறித்த கட்டிடத்தை நிர்மாணித்த ஒப்பந்ததாரர்கள் முறையாக வளங்களை பயன்படுத்தவில்லை என்று பாடசாலையின் பணிப்பாளர் மோசெஸ் டிராங்கு குற்றம்சுமத்தியுள்ளார்.

Related Articles

Back to top button