...
செய்திகள்மலையகம்

கெப்பெட்டிபொல விசேட பொருளாதார வர்த்தக சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட அவசர விபத்துப் பிரிவு சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் கையளிப்பு.

கெப்பெட்டிபொல விசேட பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அவசர விபத்துப் பிரிவினை சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கெப்பெட்டிபொல மத்திய மருந்தக வளாகத்தில் இடம்பெற்றது.

கெப்பெட்டிபொல விசேட பொருளாதார வலய வர்த்தக சங்கத்தின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 80 இலட்சம் ரூபாய்கள் செலவில் இந்த அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெலிமடை பிரதேச சபையின் தலைவரும், கெப்பெட்டிபொல விசேட பொருளாதார நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவருமான எஸ்.எஸ். ஏ.ஆர். பந்துசேன மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார சேவை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen