கெம்பியன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!!! பூஜைக்கு விடுமுறை வழங்காத தோட்ட முகாமை?
ஆலய பூஜையினை மேற்கொள்ள அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கெம்பியன் கிழ்பிரிவு தோட்ட மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர.
பொகவந்தலாவ கெம்பியன் கீழ் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் தங்களின் தோட்ட ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜை வழிபாட்டினை மேற்கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தால் அரை நாள் விடுமறை வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை ஆலயத்தில் பூஜை ஏற்பாடுகள் இருப்பதானால் அதற்காக அரை நாள் விடுமுறை வழங்க பட வேண்டுமென கோரிய போது, தோட்ட தொழிலாளர்களை நாளை முதல் தொழிலுக்கே வரவேண்டாமென தோட்ட உதவி முகாமையாளர் அறிவித்ததாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர் .
குறித்த சம்பவம் தொடர்பாக மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்தி எங்களுக்கான உரிய தீர்வினை பெற்றுதருமாறு குறித்த தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹட்டன் -நிருபர்