செய்திகள்

கெல்சி தோட்ட ஆலயத்திற்கு முருகன் சிலை ..

டி,சந்ரு

இன்று 19 ஆம் திகதி நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கெல்சி தோட்டம் மஹாஎலிய டிவிஷன் அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெற இருப்பதால்,

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானி ன் ஆலோசனைக்கு அமைய கடந்த 5 ஆம் திகதி குறித்த இடத்திற்கு சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி தேவையான குறை நிறைகளை கேட்டறிந்து இன்றைய தினம் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்கள் அவ்விடத்திற்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்து அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள பிரதான வடிகாள் அமைப்பை முறையாக சீர்திருத்தி தனது சொந்த நிதியில் அழகான ஐம்பொன்னால் அமைக்கப்பட்ட முருகன் மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய உருவச்சிலைகளை ஆலய அறங்காவலர் சபையினரிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் லோகநாதன் அவர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நானுஓயா கிளை காரியாலய உத்தியோகஸ்தர்களும் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button
image download