செய்திகள்

கெஸ்பாவ பிரதேசத்தை உலுக்கிய தம்பதியரின் மரணம்.

கெஸ்பாவ பிரதேசத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட கணவன்-மனைவி இருவரதும் மரணம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் அவரது கணவனால் அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் கணவர் தூக்கில் தொங்கி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கணவன் தனது தந்தைக்கும் சகோதரிக்கும் எழுதிய இரு கடிதங்கள் வீட்டின் அறையில் தூக்கிலிருந்த அவரது சடலத்துக்கு அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொலையுண்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணின் சடலம் வீட்டில் ஓர் அறையில் மெத்தையில் கிடந்ததாகவும் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண்ணை கணவன் கொலை செய்த பின் அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen