செய்திகள்மலையகம்

கேகாலையில் ஒரு பகுதி முடக்கம்.!

கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மலவிட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோலிந்தா தோட்டத்தின் மூன்றாம் பிரிவு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.

அத்துடன், 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

அதன்பிரகாரம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் ;

புத்தளம் மாவட்டம் மாதம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரக்கலகம கிராம உத்தியோகத்தர் பிரிவு.

ஆரச்சிகட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருக்குபானே கிராம உத்தியோகத்தர் பிரிவு.

மாத்தறை மாவட்டம் வெலிகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெற்கு பெலேன கிராம உத்தியோகத்தர் பிரிவு.

யாழ்ப்பாணம் மாவட்டம் கரவெட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவு.

Related Articles

Back to top button
image download