செய்திகள்

கேகாலையில் சில பகுதிகள் முடக்கம்.!

நாட்டில் மேலும் 03 மாவட்டங்களில் சில பகுதிகள் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கேகாலை, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 03 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதியும், கேகாலை மாவட்டத்தில் மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவில் மாதெய்யாவ கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவில் மருதமுனை -3 கிராம சேவகர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் ஹலமட மற்றும் குருணாகல் மாவட்டத்தின் இலுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் விலோகொட கிராமம் என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

Related Articles

Back to top button