...
செய்திகள்

கேகாலை – அருள்மிகு கதிரேசன் திருக்கோயில் 

கேகாலை மாநகரில் கோயில் கொண்ட கதிரேசன் 
பெருமனது கொண்டு நம்மை வாழவைக்க வந்தமர்ந்தான்
பெருமை மிகு பெருவாழ்வையெமக்கென்றும் உறுதிசெய்ய
பார்த்து வழிகாட்டி எமக்கருள்வான் துணிவு கொள்வோம் 
பெருவீதி மருங்கினிலே வீற்றிருக்கும் கதிரேசன் 
மனத்திலென்றும் நிம்மதியைத் தந்திடவே வந்தமர்ந்தான் 
இப்புவியில் நம்வாழ்வு வளங்கள் பல பெற்றிடவே
என்றும் துணையிருந்து எமக்கருள்வான் துணிவு கொள்வோம் 
மலைசூழ்ந்த நன்னகரில் மாண்புடனே இருந்தருளும் கதிரேசன் 
மனக்குறைகள் நெருங்காத வாழ்வைத்தர வந்தமர்ந்தான்
மேன்மை கொண்டு வாழும் வழியெமக்குக் காட்டிடவே 
முந்திவந்து அரவணைத்து எமக்கருள்வான் துணிவு கொள்வோம் 
 குன்றுதோறும் எழுந்தருளி நம்குலம் காக்கும் கதிரேசன் 
குறைவில்லா வளவாழ்வை வழங்கிடவே வந்தமர்ந்தான்
கறையின்றி நாம் வாழ நல்ல வழிகாட்டிடவே
காலமெல்லாம் உடனிருந்து எமக்கருள்வான் துணிவு கொள்வோம்
வேல் தாங்கி அறங்காக்கும் வீரமிகு கதிரேசன் 
வீணர்களின் கொட்டமதை அடக்கிடவே வந்தமர்ந்தான்
துணிவு கொண்டு வாழும் வழியெமக்குத் திறந்திடவே
திண்ணமாய்த் துணையிருந்து எமக்கருள்வான் துணிவு கொள்வோம் 
அழகுமிகு திருக்கோயில் உறைந்தருளும் கதிரேசன் 
அச்சமில்லா வாழ்வளிக்க இக்கோயில் வந்தமர்ந்தான்
உள்ளத்தில் உறுதியை உருவாக்கி விட்டிடவே
உடனிருந்து நித்தமும் எமக்கருள்வான் துணிவு கொள்வோம். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen