செய்திகள்மலையகம்

கேகாலை-செம்பனை பயிர் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.?

செம்பனை பயிர் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (2019.12.14) காலை காலை 10 மணி அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மன்த மித்திரபால தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட செம்பனை பயிர் செய்கையை குறித்த பிரதேச தோட்ட அதிகாரிகள் ரகசியமான முறையில் மேற்கொள்ளவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அவிஸ்ஸாவளை ஹட்டன் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட தாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவிஸ்ஸாவளை பொலிசார் பிற் பகல் 2 மணி அளவில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button