செய்திகள்

கேகாலை- தெரணியகலை நூரி தோட்ட அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்…

கேகாலை மாநிலத்தில் கோயில் கொண்ட தாயே
நித்தம் உனைத்தொழுது நிற்போர் நிலையுயர்த்து அம்மா
வளம்நிறைந்த மலையகத்தில் வாழுகின்ற மக்களுக்கு 
வளமான வாழ்வுதனை வழங்கியருள்வாய் தாயே
மலைசூழ்ந்த திருவிடத்தில் அமர்ந்தருளும் தாயே
மனத்துணிவு தந்தெம்மை வாழவிடு அம்மா 
மலையேறி தொழில் செய்யும் நம்மக்கள் வாழ்வில்
ஒளியேற்றி உயர்நிலையை வழங்கியருள்வாய் தாயே
தெரணியகலை தனிலே வீற்றிருக்கும் தாயே
தொழில் செய்வோர் வளமுடனே வாழவிடு அம்மா 
நாடுயர பாடுபடும் நம்மவர்கள் வாழ்விலே ஒளிவேண்டும்
தயங்காது நன்மைகளை வழங்கியருள்வாய் தாயே
கல்வியகம் அருகுகொண்டு அமர்ந்தவளே தாயே
கவலையில்லா வாழ்வுதனை உறுதிசெய்வாய் அம்மா 
உழைப்பாளர் வாழ்க்கைநிலை உயர்ந்து வளம் பெருகிவிட
உறுதுணையாயிருந்து நலன் வழங்கியருள்வாய் தாயே
நூரி பெருந்தோட்டத்தில் இருந்தருளும் தாயே
நிலை தழும்பா நிம்மதியை தந்திடுவாய் அம்மா 
பசியின்றி, பயமின்றி வளம்பெற்று வாழ
வகைசெய்து வழியமைத்து பலம் வழங்கியருள்வாய் தாயே
துன்பங்கள் துடைத்தெறிய அருளுகின்ற தாயே
ஏற்றமிகு கல்விக்கு உந்துதலைத் தந்திடம்மா
பொருள்வளம் பெருகிபெற்றவர்கள் வாழ்க்கை நிலை உயர்வதற்கு
பேரருளே, பெருமாட்டி அருளிடுவாய் எம்தாயே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button