மலையகம்

கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்க கோரி மலையகத்தில் பல தோட்ட பகுதிகளில் வேலைத்திருத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டம் கேகாலை மாவட்டத்திலும் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அயிலா தோட்ட தொழிலாளர்கள், எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல் கொல்ல தோட்ட தொழிலாளர்கள் மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீ ஓயா தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button