செய்திகள்

கேகாலை மாவட்டத்தில் கொரோணே தொற்றாளரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது …

(ரா.கமல்)
கேகாலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டுமே 37 கொரோணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்படி கேகாலை மாவட்டத்தில் மொத்த கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1007ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4583 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 1007 தொற்றாளர்களில் மாவனல்லையில் 57பேரும், கேகாலையில் 48பேரும், வரக்காபொலையில் 86பேரும், ருவன்வெல்லையில் 96பேரும், தெஹியோவிட்டயில் 326பேரும், அரனாயக்கவில் 37பேரும், புலத்கோஹ பிட்டியவில் 85பேரும், எட்டியாந்தோட்டையில் 86பேரும், கலிகமுவயில் 55பேரும், ரம்புக்கணையில் 67பேரும், தெரணியகலையில் 64பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் மொத்தமாக இதுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 18480 ஆக இருந்ததாகவும் தற்பொழுது 4583பேர் தனிமைப்படுத்தலில் இருக்க ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை கேகாலை மாவட்டத்தில் 04மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவற்றில் அதிகமான தொற்றாளர்கள் தெஹியோவிட்ட பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button