சமூகம்
கேகாலை மாவட்டம் தோட்ட தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்
கேகாலை மாவட்டம் தெரனியகல பிரதேசத்திற்கு உட்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 1000/= சம்பளம் உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெய்யோவிட்ட பிரதேச தோட்ட தொழிலாளர்களும் யட்டியாந்தோட்டை தோட்ட தொழிலாளர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் தெரனியகல உடபாகை சந்தியில் இருந்து தெரனியகல நகர் வைர பேரணியாக முன்னெடுக்கப்பட்ள்ளது.
இதன்போது, சுமார் 1500 க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.