நிகழ்வுகள்

கேகாலை- வரக்காப்பொலை மாதெனிய அப்பர் டிவிஷனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள்..

கேகாலை மாவட்டம் வரக்காப்பொலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாதெனிய அப்பர் டிவிஷன் கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு 29/08/2021 அன்று இடம் பெற்றது.

நிகழ்வு வன்னி ஹோப் நிறுவனத்தினூடாக Royal College 1980 Batch Tamil Class Overseas and Sri Lanka Members அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

இதன் போது உலர் உணவுப்பொருட்களோடு மாணவர்களுக்கான புத்தக பைகள், விளையாட்டு பொருட்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் மக்களை விழிப்புணர்வு படுத்தும் விதமாக சில கலந்துரையாடல்களும் நிகழ்வில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

தகவல் -சிவகுமாரன்

Related Articles

Back to top button