செய்திகள்

கேரளாவில் 14 பேருக்கு ‘ஸிகா’ வைரஸ் : இலங்கைக்குள் நுழையாமல் தடுக்குமா அரசாங்கம்.?

நுளம்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் ஸிகா நோய் செல்லக்கூடும்.!

ஸிகா வைரஸ் அறிகுறிகள் ; காய்ச்சல், கண் சிவத்தல், உடல் உளைச்சல், தோலில் சொறி, மூட்டு வலி, தலைவலி

வைரஸ் தொற்று இருப்பதன் அறிகுறிகள் தெரிய இரண்டு முதல் ஏழு நாட்கள் பிடிக்கும்.

இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கேரளாவில் பரவும் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இலங்கை வந்தால், அந்த வைரஸ் நாட்டில் பரவும் அபாயம் உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நுளம்புகள் மூலம் பரவும் ‘ஸிகா’ வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் கேரளாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் இருந்து ஒருவர் இலங்கை வந்தால் அவர் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பில் உடனடியதாக பரிசோதனை நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் இந்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உகாண்டாவில் உள்ள ஸிகா காடுகளில் வாழும் குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியது. 1947 ஆம் ஆண்டிலே கண்டுப்பிடிக்கப்பட்டது. அதுவே பெயர் காரணமானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நுளம்புகள் கடித்தால் யாருக்கும் நோய் தொற்றலாம்.

ஸிகா, தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ (Aedes aegypti) நுளம்புகளால் பரவுகிறது. பாலியல்தொடர்புகள் மூலமாகவும் ஸிகா பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஸிகா நோய்த்தொற்று உள்ளவர்களின் எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாக இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button