தொழில்நுட்பம்

கேரளா வெள்ள நிவாரணம் : 7 கோடி வழங்கும் கூகுள்

கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூகுள் சார்பில் 7 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள சேதங்களை சரி செய்ய கேரளாவுக்கு 7 கோடி ரூபாய் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள்.ஓஆர்ஜி (Google.org) மற்றும் கூகுளர்ஸ் (Googlers) சார்பில் ஒரு மில்லியன் டாலர்கள் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூகுள் தெற்காசியா மற்றும் இந்தியாவுக்கான துணை தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார். கேரள வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவியாக கூகுள் பேரிடர் மீட்பு குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ஏழு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தது.

“கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மனமுடைந்து போனோம். ஆப்பிள் சார்பாக கேரள முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள், மற்றும் பள்ளிக் கூடங்களை கட்ட உதவியாக இருக்கும்,” என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம், ஆப் ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு உதவ பிரத்யேக பேனர்களை பதிவிட்டது. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு 5, 10, 25, 50, 100 அல்லது 200 டாலர்கள் வரை நிதி வழங்கலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

Related Articles

16 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button