...
செய்திகள்

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மட்டக்குளி மற்றும் ராகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (25) காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில், இருவேறு பகுதிகளில் பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தமட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த19 வயதுடைய இளைஞர் ஒருவர் 6 கிலோ 542 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, பேலியகொடை அதிவேக நெடுஞ்சாலையில் காவலரணில் கடமையாற்றிவந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான குறித்த காவல்துறை உத்தியோகத்தரிடமிருந்து 4 கிலோ 191 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen