செய்திகள்

கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது.!

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையான மாற்றுமாறு கோரி, மஹர சிறைச்சாலை கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

அதற்கு ஆதரவு தெரிவித்து பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவரும் இன்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அனைத்து கைதிகளுக்கும் பாகுபாடு இன்றி சம அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமெனவும் மரண தண்டனை கைதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதேவேளை, வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மரண தண்டனை கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button