செய்திகள்

கைதுகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளின் கீழ் மக்கள் கைது செய்யப்படுவதை சவாலுக்கு உட்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார,உட்பட மூவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வௌியிட்ட வழிகாட்டுதல்களை பயன்படுத்தி, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் எடுக்கும் நடவடிக்கையின் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்படுதவாக குறித்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button