நுவரெலியா
வாகன விபத்தில் பாதசாரிக்கு நடந்த கதி!
ஹட்டன் – கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை பிரதேசத்தில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று பாதசாரியொருவர் மீது
மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயாம் அடைத்த பாதசாரி டிக்கோயா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
சிகிக்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பில் திம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.