நுவரெலியாமலையகம்

கொட்டகலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.

நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம்
இரண்டாம் கட்டமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெருந்தோட்ட மற்றும் நகர்ப்புற 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட மக்களுக்கு முதலாவது தடுப்பூசி கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந் தலைமையில் இன்று வட்டகொடை, போகாவத்த, மவுண்ட்வேர்னன் ஆகிய கிராம சேவகர் பகுதி மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இதன் போது சபையின் உறுப்பினர்களான. விஜயகுமார், அருண்தினேஷ், லெட்சுமன், நகுலேஸ்வரி போலீஸ் அதிகாரிகள் வைத்தியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களும் பிரஜா சக்தி தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen