செய்திகள்

கொட்டகலையில் கோர விபத்து – மூவருக்கு காயம்

(மாதுருபாகன் ராகவ்)

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸார் இதனை எமது செய்திப்பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன்
ஆகியோரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த வேனொன்றும் கொட்டகலை கொமர்ஷல்
பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கற்பாறையுடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பத்தனை பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com