செய்திகள்

கொட்டகலையில் விபத்து – மூவர் வைத்தியசாலையில்..

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவூக்குட்பட்ட கொட்டகலை நகரில் நேற்று (28) வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகரில் இருந்து பத்தனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் கொட்டகலை வூட்டன் பசாரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதன் பின்னர் இழுத்து செல்லப்பட்டு பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் மோதியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி எறியப்பட்டதுடன் மற்றய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் என மூவர் படுங்காயமடைந்துள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கில் மற்றய மோட்டார் சைக்கிள் வேன் என்பன சேதமடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பத்தனை போலீசார் தெரிவித்தனர். மேலும் மோட்டார் சைக்கில் சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு வேனில் மோதி அதன் அடியில் சென்றுள்ளதால் வேனுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவம் திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

–க.கிஷாந்தன்-

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com