கல்விமலையகம்

சிறப்பாக இடம்பெற்ற கொட்டகலை அரசினர் கலாசாலையின் ஆசிரியர்களின் கலைவிழா..

தேசிய கல்வி நிறுவக பட்ட மேற் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் கொட்டகலை பிராந்திய நிலைய ஆசிரியர்களின் கலைவிழாவும் “படி” நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று கொட்டகலை அரசினர் கலாசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பட்டமேற்கல்வி இணைப்பாளர் எம்.எச்.எம்.ஜவ்பர் தலைமை தாங்க,பிரதம அதிதியாக சிரேஷ்ட விரிவுரையாளரும்,தேசிய பட்டமேற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் இணைப்பாளருமாகிய ஷாஜஹான் சிபான் கலந்து சிறப்பிக்க,சிறப்பு அதிதியாக கொட்டகலை அரசினர் கலாசாலையின் அதிபர் திருமதி சந்திரலேகா கிங்ஸ்லியும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த கலை விழாவில் பட்ட மேற் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் மாணவர்களின் பாரம்பபரிய கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.

Related Articles

Back to top button