நுவரெலியாமலையகம்

கொட்டகலை-உணவுச் சட்டத்திற்கு முரணான வகையில் உணவு தயாரிப்பு ..?

கொட்டகலை பகுதியில் பொது சுகாதார அதிகாரிகள் இன்று (13) திடீர் சோதனையொன்றை முன்னெடுத்திருந்தனர்.

பொது சுகாதாரப் பிரிவின் தலைமை அதிகாரி எஸ்.சௌந்தராஜன் தலைமையில், உணவை கையாளும் நிறுவனங்களில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உணவுச் சட்டத்திற்கு முரணான வகையில் உணவுகளைத் தயாரித்த, கையாண்ட குற்றத்திற்காக சுமார் 10 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக பொது சுகாதாரப் பிரிவின் தலைமை அதிகாரி எஸ்.சௌந்தராஜன் தெரிவித்தார்.

இதேவேளை கொட்டகலை பிரதேசத்தில் இயங்கிவந்த பழைய பொருட்களை சேகரிக்கும் இடமொன்றும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

நுளம்புகள் பரவும் வகையில் குறித்த இடத்தில் பழைய பொருட்கள் கையாளப்பட்டதால் குறித்த இடம் முற்றுகையிடப்பட்டதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Back to top button