...
செய்திகள்நுவரெலியாமலையகம்

கொட்டகலை கிரிஸ்லஸ்பாம் சந்தியில் இருந்து அந்தோனிமலை வரை தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதை செப்பனிட்டு திறந்து வைக்கப்பட்டது ..

கொட்டகலை கிரிஸ்லஸ்பாம்  சந்தியில் இருந்து அந்தோனிமலை வரை  தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதை தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பாதை நாட்டை கட்டியெழுப்பும் ” அதிமேதகு ஜானாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் சௌபாக்கியா தொலைநோக்கு” மற்றும் ஒரு லட்சம் கிராமிய பாதைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் பங்களிப்பில் இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க நெடுஞசாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அவர்களின் வழிகாட்டலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் குறித்த பாதையின் அபிவிருத்தி சுமார் 4.45கிலோ மீற்றர் காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. குறித்த பாதையானது அரசாங்கத்தின் சுமார் 80 மில்லியன் ரூபாய்  செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட குறித்த பாதை நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாதன் காரணமாக கடந்த காலங்களில் பொது மக்கள் இவ்வீதியினை புனரமைத்து தருமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுப்பட்டனர்.அதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் பொது மக்கள் விடுத்த வேண்டுகோளளினையடுத்தே குறித்த பாதை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாத் அவர்களின் ஏற்பாட்டடில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு  இ.தொ.காவின் பிரதிதலைவர் அனுஷா சிவராஜா,முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ்,ஏ. பிலிப்குமார் கொட்டகலை  பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen