கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி ஒன்று இன்று(19) காலை 10 மணியளவில் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் படுகாயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோட்டன்பிரிட்ஜ் பகுதியிலிருந்து பத்தனை பகுதிக்கு சென்ற குறித்த லொறி, தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாரிய வளைவு காரணமாக லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
லொறியில் ஏழு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் மூன்று பெண்களும், ஒரு குழந்தையும், ஒரு ஆணும் அடங்களாக ஐவர் படுகாயமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.