கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board வழங்கும் நிகழ்வு இன்று ..

uthavum karangal

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board ஒன்று இன்று (1/12) வழங்கி வைக்கப்பட்டது.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் எம் ஜிஏ பியதாச கலந்துகொண்டார்.

மலையக மாணவர்களின் கல்வியை மேம் படுத்துமுகமாக அமெரிக்காவில் இருக்கும் செல்லதுரை சிவராம், கனடாவில் இருக்கும் சுப்பையா சிவகுமார் (கியூபெக்) , கனடாவை சேர்ந்த பெரியசாமி பாலேந்திரா (கியூபெக்) ஆகியோரின் நன்கொடையின் கீழ் குறித்த Smart Board வழங்கி வைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

குறித்த Smart Board ஆனது அனுசரணையாளர்களின் தந்தை மார்களின் நினைவாக வழங்கி வைத்தமை விசேட அம்சமாகும்.

சுதர்ஷினி ,மஞ்சுல சமந்த தம்பதியினர், (கொட்டகலை) நிகழ்வை ஒழுங்கு படுத்திருந்தனர்.

தொலைநிலை கல்விக்கு பெரிதும் பங்களிப்பு வழங்கும் வகையில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டமையை தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் அனுசரணையாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

சங்கீதா

தொடர்புடைய செய்திகள்