நிகழ்வுகள்மலையகம்

கொட்டகலை தொழிற்பயிற்சி நிலையத்தின் ஏற்ப்பாட்டில் மலையக யுவதிகளுக்கு கைத்தொழில் பயிற்சிகள்…

காங்கிரஸ் தொழில் பயிற்சி நிறுவனம் மீண்டும் ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை செய்துள்ளது. இலங்கை இந்திய சமுதாய பேரவையுடன் இணைந்து இப்பிரதேசத்தில் வாழும் யுவதிகள் 130 பேருக்கு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கியுள்ளது. பத்திக், பின்னல் வேலைப்பாடுகள், எம்ரோய்டனிங் போன்ற தொழிற்பயிற்சிகளை வழங்கியதன் மூலம் இந்த யுவதிகள் வீடுகளில் இருந்தபடியே சுயதொழில்களை மேற்க்கொண்டு ஆதாயத்தை அடைய வாய்ப்பு கிட்டியுள்ளது தொடர்ச்சியாக ஏழு நாட்களில் இடம்பெற்ற இப்பயிற்சி வகுப்பில் எளிமையான முறையில் கற்கை நெறிகள் வழங்கப்பட்டுள்ளதால் பயிற்சிபெற்ற 130 யுவதிகளுமே பயன்பெற தகுதியுடையவர்கள்.

காங்கிரஸின் கனவுக்கூடமாக உருவாக்கம் பெற்று நீண்டகாலமாகவே பல்வேறு தொழில்நுட்ப பாசறைகளை நடாத்தி மலையகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு சுயத்தொழில் பயிற்சிகளை வழங்கியது காங்கிரஸ் தொழிற்பயிற்சி நிலையம் என்றால் மிகையல்ல.

காங்கிரஸ் தொழில் பயிற்சி நிறுவத்தின் இந்த முயற்சிகளை வெளிநாடுகளிலும் கூட பாராட்டுப்பெற்றது ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் பூரண கல்வியறிவை பூர்த்தி செய்யாதவர்களாக இருக்கின்றார்கள் இவர்கள் தமது குடும்பத்திற்கு பாரமாக இருப்பதாக விரக்தியடைந்து போகின்றார்கள் இவ்வாறானவர்களை இனங்கண்டு இலவசமாக கைத்தொழில் பயிற்சிகளை வழங்கி அவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றுவதே காங்கிரஸ் தொழில் நிறுவனத்தின் இலக்கு கடந்து வந்த காலங்களில் இதனை ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றியுள்ளது.

முக்கியமாக மலையக குடும்பங்களில் பொருளாதாரம் பெரும்பாலும் இன்று பெண்களின் கரங்களை நம்பியே இருக்கின்றது.

இதனால் பெண்கள் குறிப்பாக இளைய தலைமுறை பெண்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .அவர்களுக்கு முறையான கைத்தொழில் பயிற்சிகளை வழங்குவதே இதற்க்கான சிறந்த வழி இதற்காக பல்வேறு செயற்த்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த காங்கிரஸ் தொழிநுட்ப நிறுவனம் ஆவணம் செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது மலையக யுவதிகள் 130 பேர் பூரண பயிற்சி பெற்றவர்களாக வெளியேறியுள்ளார்கள் இவர்கள் தமது பயிற்சி திறமைகளை வெளிக்கொணரும் போது ஏனைய யுவதிகளும் இத்துறையில் ஆர்வம்
காட்டுவார்கள் என்று காங்கிரஸ் தொழிநுட்ப நிறுவனம் எதிர்பார்கின்றது.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கோதை நாச்சியார் தொண்டமான், விஜலக்ஷிமி தொண்டமான் மற்றும் இலங்கை இந்திய சமுதாய பேரவை அத்தோடு ஹய்ளு ரட்டா நிறுவனத்தின் ஸ்தாபகர்களான ஹேஷானி சத்திஷ் போல்லோகமா ,மிஸ் நிலூஷி சிவராஜா ஆகியோரின் பங்குபற்றலுடன் இப்பயிற்சி பட்டறை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இ தொ கா -ஊடக பிரிவு

Related Articles

Back to top button