...
நுவரெலியாமலையகம்

கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயம்.

திம்புள்ள பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டகலை நகர உள்வீதியொன்றிலிருந்து பிரதான வீதி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், ஹட்டனிலிருந்து தலவாக்கலை திசையாக பயணித்த உந்துருளியும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen