செய்திகள்நுவரெலியாமலையகம்

கொட்டகலை பகுதியில் கறையான் லயன்..?

கல்லறை, இருட்டரை என்றெல்லாம் விமர்சிக்கப்படுகின்ற லயன் யுகத்துக்கு முடிவு கட்டப்படும் என மலையக அரசியல் வாதிகள் தம்பட்டம் அடித்தாலும், நடவடிக்கைகளானவை அறிக்கைகளுடன் நின்றுவிடுகின்றன.

மலையக மக்களின் அவலநிலையை எடுத்து காட்டும் முதல் அடையாளம் லயன் குடியிருப்பே ஆகும். அந்த அவலத்திலும் மிகவும் மோசமான லயன் குடியிருப்பை கொண்டதுதான் டெவன் தோட்ட ஒரு பகுதி லயன் குடியிருப்பு.

கொட்டக்கலை பிரதேசசபைக்கு உட்பட்ட இத்தோட்டத்தில் ஒரு லயன் குடியிருப்பு ஒன்று உள்ளது. இக்குடியிருப்புக்கு மக்கள் சூட்டியுள்ள பெயர் கறையான் லயன்.

காரணம் முழுக்க கறையானால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது . ஞாயிற்றுக்கிழமையோ அல்லது விடுமுறை நாட்களிலோ இக் கறையான்களை அப்புறப்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது உண்ணும் உணவிலும் அல்லது குடிக்கும் நீரிலும் இக்கறையான் விழுந்து மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை உண்டு பண்ணுகின்றது.

மேலும் எங்கெங்கோ வீடுகளை நிர்மாணித்து வரும் மலைநாட்டுபுதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இதனை கண்டுக்கொள்ளாதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

லயன் கூரைகளை கறையான் அறித்து விட்டதால் எப்போது கூறை இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இரண்டு பக்க லயன்களை கொண்ட இக்குடியிருப்பில் பச்சிளம் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துவதென்பது எமனோடு வாழ்க்கை நடத்துவது போல் என உணர்கின்றனர்.

காரணம் கூரைகளின் நிலமை அவ்வாறு காணப்படுகின்றது.எனவே இவாறான மோசமான நிலையை உடைய இக்கறையான் குடியிருப்பை உடைத்து புதிய வீடுகளை நிர்மானித்து கொடுக்க வேண்டிது அரசாங்கத்தின் பாரிய பொருப்பாகும்.

செய்தி – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Back to top button
image download