மலையகம்

கொட்டகலை பிரதான வீதிக்கு அருகாமையில் குப்பைகள் கொட்டப்படுவதாக மக்கள் விசனம்

கொட்டகலை பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு அருகாமையில் குப்பைகள் கொட்டப்படுவதால் வியாபாரிகளும் ,நுகர்வோரும் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்டுகின்றது.

கருவாடு,நெத்திலி போன்று மேலும் கலாவதியன பொருட்களும் குறித்த இடத்தில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, பாடசாலை மாணவர்களும்,பாதசாரிகளும் பல்வேறு வகையில் அசோகரியத்திற்கு உள்ளாகுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜாமணி பிரசாத்தை தொடர்புகொண்டு வினவியபோது ,இந்த குப்பைகள் போடுவது தொடர்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளதாகவும் மேலும் குறித்த இடத்தில் காணப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download