செய்திகள்நுவரெலியாமலையகம்

கொட்டகலை பிரதேச சபை கட்டிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Protect என்ற வீட்டு பணியாளர்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில் கொட்டகலை பிரதேச சபை கட்டிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் பிரதேச மக்கள் உட்பட பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டதோடு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களையும் எழுப்பினர்.

சிறுவர் மற்றும் பெண்கள் உரிமை தொடர்பான சட்டங்கள் உலகளாவிய ரீதியில் இருக்கும் அதேநேரத்தில் இலங்கையிலும் காணப்படுகின்றது இருப்பினும் அந்த சட்டங்கள் மலையகத்திற்கு மாத்திரம் ஏன் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசத்துடன் பேசினார்.

அத்துடன் C 189 என்ற சட்டத்தை இலங்கையில் அமுலாக்க வேண்டிய கட்டாய தேவை அரசாங்கத்திற்கு எழுந்துள்ளதாகவும் அதை உடனடியாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதைப்போல் மலையகத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக பணியாளர்களாகவும் செல்வோம் அனைவருக்கும் உரிய பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் சட்டத்திருத்தங்கள் ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டத்தை உருவாக்கும் இடத்திலுள்ள ஒருவர் இல்லத்தில் இவ்வாறான சம்பவம் நடந்தவை தொடர்பில் தாம் மிகுந்த வேதனை அடைவதோடு அவர்களுக்கு எதிராக உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதுவே இவ்வாறான இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வகையில் அரசாங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கௌசல்யா

Related Articles

Back to top button