நுவரெலியாமலையகம்

கொட்டகலை மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் கொரோனா விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுப்பு.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி அவர்களின் பணிப்புரைக்கமைவாகவும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டமானது கொரோனா தடுப்புபணியிலும், தடுப்பூசி வழங்கும் பணியிலும் சுகாதார பிரிவிற்கு சிறப்பான உதவிகளையும் ஏற்பாடுகளையும் நல்கி வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

அந்த வகையில் கொட்டகலை பொது சுகாதார பிரதேசத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய பிரதேசங்களிலுள்ள அனைவருக்கும் கொட்டகலை பிரஜாசக்தி நிலைய இணைப்பாளர் ஜோக்கிம், பிரஜா தன்னார்வ குழு அங்கத்தவர்கள் World vision நிறுவனத்தினுடைய அதிகாரிகளும் இணைந்து கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு கையேடுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen