கல்விமலையகம்

கொட்டகலை ஸ்ரீ/ப்பரக்கும் சிங்கள வித்தியால மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு..

இன்றைய தினம் கொட்டகலை ஸ்ரீ/ப்பரக்கும் சிங்கள வித்தியாலயத்தின் தரம் ஒன்று தொடக்கம் பதினொன்றாம் தரம் வரையிலான கல்வி பயிலுகின்ற 110 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை உபகரணங்களை சமூக செயல்பாட்டாளர் பெரியசாமி பாலேந்திரா (BSC BE) [கியுபெக் கனடா] அவர்களின் அனுசரணையியில் கொட்டக்கலையை சேர்ந்த திரு, திருமதி மஞ்சுள தம்பதியினர் மூலம் குறித்த மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சமூக செயல்பாட்டாளர் பெரியசாமி பாலேந்திரா மூலம் கொட்டக்கலையை அண்மித்த தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு தொடர்பில் வலயக் கல்வி பணிப்பாளர் பியதாச குறிப்பிடுகையில் ,இங்கு வந்துள்ள கல்வி தினைகளத்தின் அதிகாரிகளான திரு.மோகன்ராஜ் அவர்களுக்கும் திரு.சுஹந்த அவர்களுக்கும் மேரி எலிசபெத் அவர்களுக்கும் மஞ்சுள சமந்த சில்வா கொட்டகலை த.ம.வியை சேர்ந்த ஆசிரியை சுதர்ஷினி அவர்களுக்கும் இப் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கம்.

கனடாவை சேர்ந்த பெரியசாமி பாலேந்திரன் அவர்களும் அவர்களின் உறவினர்களாகிய மஞ்சுள சமந்த சில்வா,சுதர்ஷினி ஆகியோர் நேரம் காலம் பாராமல் தொழிலையும் செய்யாமல் இந்த நேரத்தை ஒதுக்கி செய்யும் செயலானது வறிய மாணவர்களின் கல்வியை உயர்த்தும் முகமாக செய்யும் இந் நிகழ்வுக்கு நான் மரியாதை வழங்கி கௌரவத்தை கொடுப்பதற்காகவே எனது பல வேலைகளுக்கு மத்தியிலும் இந் நிகழ்விற்கு கட்டாயம் வர வேண்டும் என தீர்மானித்தேன்.

பாலேந்திரன் அவர்கள் தனது பிறந்த தினத்தை அங்கு கொண்டாடாமல், எங்களின் பிள்ளைகளுக்கு இவ்வாறான உதவிகளை செய்வதன் மூலம் எங்களின் பிள்ளைகளுடன் இருந்து பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.

இவர் தமிழ் பாடசாலை மட்டுமன்றி எங்களின் சிங்கள இன பாடசாலைகளையும் தெரிவு செய்து உதவி செய்கின்றமை நினைத்தால் அவரிடத்தில் எனக்கு பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்படுகின்றது.அவரை நினைத்து பெருமைபடுகின்றேன்.

தனது தந்தை நினைவாக இதை செய்யும் போது இவரை பெற்ற தாய் தந்தை இருவருக்கும் மனம் சந்தோஷம் அடையும்.அவர்களின் ஆத்மா நிறைவாக சாந்தியடையும்.

ஒரு சிலர் அவர்களின் பெயரும்,புகழும் தெரிவதற்காகவே பரிசு பொருட்கள் வழங்குவார்கள் ஆனால் இவர் தான் கண்டறியாத யாரோ கண்களுக்கே தெரியாத குழந்தைக்கு செய்யும் உதவி அவரை மென்மேலும் உயர்த்தும்.இந்த உதவிகளை நீங்கள் மறக்காமல் பொருட்களை வீணாக்காமல் நன்றாக படித்து நல்ல பெறுபேற்றை பெற்று தந்து அவருக்கு மிக்க நன்றி உள்ளவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

அவர் ஏற்கனவே Duplo,smart Board and A4 sheets ஆண்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி உள்ளார். இந்த பரிசு பொருட்களை பெற்றதும் பிள்ளைகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை பார்க்கும் போது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது.இதனை திரு.பாலேந்திரன் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஆனால் தொலைபேசி ஊடாக பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் என நம்புகிறேன். இவரின் சார்பாக இங்கு இயங்கி கொண்டிருக்கும் மஞ்சுள சமந்த சில்வா, சுதர்ஷினி ஆகியோர்களுக்கு இவர்களுடன் இணைந்து செயலாற்றும் திரு.மோகன்ராஜ், திருமதி.மேரிஎலிசபெத்ஆகியோருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலேந்திரன் அவர்களுக்கும் அவரின் குடும்பத்யாருக்கும் மென்மேலும் உயர்வு கிடைக்க வேண்டும் என்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிராத்திக்கின்றேன். அவருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் என குறிப்பிட்டார்.

கவியுகன்

Related Articles

Back to top button