...
செய்திகள்

கொட்டகலை-30 வயதிற்கு மேற்பட்டாேருக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி..

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர்  பாரத் அருள்சாமி அவர்களின் பணிப்புரைக்கமைவாகவும்  பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டமானது கொரோனா  தடுப்புபணியிலும், தடுப்பூசி வழங்கும் பணியிலும் சுகாதார பிரிவிற்கு சிறப்பான உதவிகளையும் ஏற்பாடுகளையும் நல்கி வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்
கொட்டகலை பொது சுகாதார பிரதேசத்திற்குட்பட்ட  கொட்டகலை 475 N Drayton 475B patana கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய பிரதேசங்களிலுள்ள 30 வயதிற்கு மேற்பட்டாேருக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் 30.08.2021 அன்று டிரைட்டன் மற்றும் பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் 1450 க்கும் அதிகமானோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதோடு. இந்த தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டம் சார்பாக  கொட்டகலை,    நிலைய இணைப்பாளர் ஜோக்கிம் பிரஜா தன்னார்வ குழு  அங்கத்தவர்கள் அவர்களோடு   இந்ததடுப்பூசி வழங்கும் வேலை திட்டத்திற்கு  பாெது சுகாதார பிரிவினருக்கு  அனைத்து உதவிகளையும்  சிறப்பாக  நல்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen